Sunday, September 21, 2014

பஞ்சாபில் துணிகரம்: ரூ.11 லட்சம் பணம் கொள்ளை

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டம் கோட்டிசேஹான் கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் அதிகாலை நுழைந்த மர்மமனிதர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை அதில் இருந்த ரூ.11 லட்சம் பணத்துடன் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர். இதுகுறித்து அந்த வழியாகச்சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜதிந்தேர் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


No comments:

Post a Comment