உலக அளவில் தென்னை சாகுபடியில் 3–வது இடம் வகிக்கும் இந்தியா தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. 4–வது இடம் வகிக்கும் இலங்கை தென்னை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 122 ஆயிரம் கோடி இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்தி செய்து இந்தியா முதலிடம் பெற்று பெருமை சேர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 7 ஆயிரம் கோடி தென்னை மரங்கள் வளர்கின்றன. சுமார் 40 ஆயிரம் கோடி இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்தியாகிறது. தேங்காய் 50 சதவீதம் வீட்டு உபயோகத்துக்கும், 35 சதவீதம் பூஜை, பரிசு தாம்பூலம் போன்றவற்றும் பயன்படுகிறது. 15 சதவீதம் மட்டுமே இளநீராக பயன்படுத்தப்படுகிறது. இளநீர் பயன்பாடு மிகவும் குறைவாகும்.
No comments:
Post a Comment