Monday, September 1, 2014

ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை: கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம்

கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கதிரூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 27). ஆர்.எஸ். எஸ். இயக்க தொண்டர். இவர் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு, தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அவரை வழிமறித்த ஒரு கும்பல், மனோஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. இது குறித்த தகவல் பரவியதும், மனோஜ் கொலையுண்ட இடத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது. இதைஅறிந்த போலீசார் விரைந்து வந்து மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


No comments:

Post a Comment