காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தனது பாராளுமன்றத் தொகுதியான ரேபரேலி சென்றுள்ளார். அங்கு மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். பாரித்பூர் கிராமம் சென்ற சோனியா காந்தி, தொகுதியில் நிலவும் மின்வெட்டு பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனையை உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் கவனத்திற்கு எடுத்து செல்வதாக கூறினார். பின்னர், தொகுதியில் பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலைகளை திறந்துவைத்தார். மற்றும் திருமண மண்டபத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment