Monday, September 1, 2014

மனைவியை கொன்று உடலை தூக்கி வந்து போலீஸ் நிலையத்தில் கிடத்திய வியாபாரி

ஆந்திர மாநிலம் சித்தூர் சங்கரையகுண்டா பகுதியை சேர்ந்தவர் காந்திமதி (வயது 30). அவரும், சலீம் (45) என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சலீம் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். காந்திமதி தினமும் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். காந்திமதியின் நடத்தையில் சலீமுக்கு சந்தேகம் எழுந்தது. வழக்கம்போல் காந்திமதி கட்டிட வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டில் இருந்த சலீம் காந்திமதியிடம், விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்றும் ஏன் கட்டிட வேலைக்கு சென்றாய்? என கேட்டு தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்தார்.


No comments:

Post a Comment