Monday, September 1, 2014

அசாமில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து 3 பேர் பலி, 20 பேர் காயம்

அசாமின் மோரானில் இன்று எரிவாயு குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்ததை அடுத்து அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. எரிவாயு வெளியேறி தீ விபத்து ஏற்பட்டதால் வாயு பரவியிருந்த பகுதிகளில் தீ கொழுந்து விட்டு எரிந்ததுள்ளது. பெரும்பாலான வீடுகள் மற்றும் பயிர்கள் சேதம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அசாம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எரிவாயு குழாய் அசாம் கேஸ் கம்பெனி லிமிடெட்டிற்கு சொந்தமானது. எரிவாயு குழாய் வெடிப்புக்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


No comments:

Post a Comment