கங்கை ஆற்றை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பான விசரணையின் போது நாட்டின் புனித நதியான கங்கையை பாதுகாப்பீர்களா? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளிக்க மத்திய அரசு 2 வாரம் கால அவகாசம் கேட்டது. புனித நதியை காப்பாற்றுவது தொடர்பான அரசின் திட்டம், நிலை அறிக்கை, மற்றும் பிற நடவடிக்கை தொடர்பான விவரங்களையும் வருகிற செப்டம்பர் 3 ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment