Wednesday, September 3, 2014

சர்ச்சைக்குரிய பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்தியானாத் மீது நடவடிக்கை எடுக்க இஸ்லாமியர்கள் வலியுறுத்தல்

இந்துக்கள் - இஸ்லாமியர்கள் என்பதினால் வகுப்புவாத மோதல்கள் நடைபெறவில்லை. மதவாத கட்சிகள் மற்றும் அமைப்புகள் இனவாத அடிப்படையில் இருதரப்பினரையும் துருவப்படுத்துகிறது. என்று வகுப்புவாத மோதல்கள் குறித்து, மில்லத் பிதாரி முகிம் கமிட்டி தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த கமிட்டியின் செயலாளர் ஜாசிம் முகமத் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட மும்பை கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் உள்பட பல்வேறு விசாரணை குழுக்கள் கூட இத்தகையை அமைப்புகளே வகுப்புவாத கலவரத்திற்கு காரணம் என்று குறிப்பிட்டு தெளிவாக தெரிவித்துள்ளது. என்று தெரிவித்துள்ளார். உத்தரபிதேச மாநிலம் கோரக்பூர் பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்தியானாத் கலவரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.


No comments:

Post a Comment