ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, ஐதராபாத் நகரம் தெலுங்கானாவின் தலைநகராக மாறியது. இதனால் ஆந்திராவுக்கு (சீமாந்திரா) புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஆந்திராவில் புதிதாக பதவியேற்ற மாநில அரசு, தலைநகர் உருவாக்குவதை முக்கிய பணியாக கொண்டது. மேலும் புதிய தலைநகர் உருவாக்கத்துக்காக சிவராமகிருஷ்ணன் தலைமையிலான கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் அளித்தது.
Read more at http://ift.tt/18UcGRs
Read more at http://ift.tt/18UcGRs
No comments:
Post a Comment