காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மத்திய காஷ்மீரில் உள்ள பட்கம் மாவட்டம் சான்டினார் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இன்னும் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.காஷ்மீரில் கனமழை காரணமாக ஜீலம் ஆறு அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment