Monday, March 30, 2015

ஜார்க்கண்ட் பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 10 பேர் உயிரிழப்பு

சத்தீஷ்கார் மாநிலம் ராய்காரில் இருந்து பீகார் மாநிலம் சாசாராம் நோக்கி சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றது. கார்க்வா-அம்பிகாபூர் சாலை பஸ் சென்றபோது எதிர்பாராத விதமாக பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். விபத்து தொடர்பாக தகவல் தெரிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 25 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது


No comments:

Post a Comment