Monday, March 2, 2015

அரியானா முதல்-மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சாலையில் சென்றவர் பலி

அரியானா முதல்-மந்திரி லால் கட்டாரி நேற்று இரவு சண்டிகாரில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்தார். கார்னல் பகுதியில் அவருடைய பாதுகாப்பு வாகனம் சாலையில் சென்றவர் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார். முதல்-மந்திரி கட்டாரியின் பாதுகாப்பு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றவர் மீது மோதியதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு வாகனமும் விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments:

Post a Comment