Monday, March 2, 2015

‘கான் நடிகர்களின் பட சுவரொட்டிகளை தீ வைத்து கொளுத்துங்கள்’ பா.ஜனதா பெண் எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை

கான் நடிகர்களின் பட சுவரொட்டிகளை தீ வைத்து கொளுத்துங்கள் என்ற பா.ஜனதா பெண் எம்.பி. சாத்வி பிராச்சியின் பேச்சால் சர்ச்சை வெடித்து உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரில் நேற்று முன்தினம் விசுவ இந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பா.ஜனதா பெண் எம்.பி. சாத்வி பிராச்சி பேசியதாவது:– ஒருமுறை மீரட் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நான் அங்கிருந்த ஒரு இளைஞரிடம் எதிர்காலத்தில் நீ என்னவாக வர விரும்புகிறாய்? என்று கேட்டேன். அதற்கு அவர், நான் ஹிருத்திக்ரோஷன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் போல ஆக விரும்புகிறேன் என்று கூறினார்.


No comments:

Post a Comment