மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பருவம் தவறிய கனமழை காரணமாக ரூ.1,000 கோடி மதிப்பிலான வேளாண் பயிர்கள் மற்றும் பழ வகைகள் நாசம் அடைந்து இருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். ஆனாலும், இது வியூகத்தின் அடிப்படையிலான மதிப்பீடு தான் என்றும், இதன் மீதான இறுதி விவரம் இன்னமும் கிடைக்க பெறவில்லை என்றும் அவர் அப்போது கூறினார். மராட்டியத்தில் மழை பாதித்த பகுதிகளை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment