அரியானா மாநில முதல்-மந்திரியாக மனோகர் லால் கட்டார் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். 90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநில சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜனதா முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பா.ஜனதா சார்பில் முதல்–மந்திரி பதவிக்கு அரியானா மாநில பா.ஜனதா தலைவர் ராம்விலாஸ் சர்மா, அபிமன்யூ, பிரேம் லதா ஆகிய மூவரில் யாராவது ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், யாரும் எதிர்பாராத வகையில் முதல்–மந்திரி பெயர் பட்டியலின் பரிசீலனையில் இல்லாத 60 வயது மனோகர் லால் கட்டார் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில கவர்னர் கப்தான் சிங் சோலங்கியிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டது.
No comments:
Post a Comment