சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பெட்ரோல் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை மீண்டும் குறைத்துள்ளது. டீசல் விலையையும் அவை குறைத்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.41 குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment