Friday, October 31, 2014

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு; 2 தீவிரவாதிகள் கைது, ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் பகுதியில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஸ்லீப்பர் செல் பிரிவினரின் நடவடிக்கைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நவ்காம்-சன்போரா பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு 2 தீவிரவாதிகளை கைது செய்தனர். நதிப்போரா அருகே உள்ள தவ்கீத் காலனியை சேர்ந்த, தனியார் பள்ளி டிரைவரான முகமது இர்பான் ஹரூன், ஹாஜா மொகாலியாவை சேர்ந்த ஷகீல் அகமது பட் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் ஸ்ரீநகரில் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.


No comments:

Post a Comment