Friday, October 31, 2014

மராட்டிய புதிய முதல்–மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார்

மராட்டியத்தில் முதல் தடவையாக பா.ஜனதா அரசு இன்று பதவியேற்றது. அக்கட்சியை சேர்ந்த 44 வயது தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுக் கொண்டனர். 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த 15–ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா 122 தொகுதிகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. ஆனால் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க தனது பழைய நட்பு கட்சியான சிவசேனாவுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையில், இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.


No comments:

Post a Comment