Thursday, October 30, 2014

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல தீவிரவாதிகள் சதி இந்திய தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்தது

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொலை செய்யவும், அவரது அரசை கவிழ்க்கவும் ஜமாத்–உல்–முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டி இருந்ததை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்து இருப்பதாக டெல்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்கு வங்காள மாநிலத்தில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 2 தீவிரவாதிகள் பலியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்ததாகவும், இது பற்றிய அனைத்து விவரங்களும் வங்காளதேச அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.


No comments:

Post a Comment