தமிழக மீனவர்கள் 5 பேருக்கு கொழும்பு ஐகோர்ட்டு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கடிதம் எழுதி உள்ளார். தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக இந்தியா, இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும் இந்தியாவுக்கு கொண்டு வந்து இங்குள்ள சிறைகளில் வைத்திருக்க முடியும். மேலும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பாக இந்திய கோர்ட்டுகளில் முறையிட்டு இந்த மீனவர்கள் சட்ட ரீதியான நிவாரணம் பெறவும் முடியும். எனவே, பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழக மீனவர்கள் 5 பேரையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி கடிதத்தில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment