இலங்கையில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போதைப்பொருள் கடத்தியதாக வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர். போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து கொழும்பு ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. தூக்கு தண்டனைக்கு எதிராக மீனவர்கள் 5 பேரும் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் 14ம் தேதிக்கு இலங்கை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன
No comments:
Post a Comment