Friday, October 31, 2014

மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியின் காதை கடித்து குதறிய கணவர் கைது

மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியின் காதை கடித்து குதறிய கணவரை போலீசார் கைது செய்தனர். தானே, பிவண்டி கோன்காவ் பகுதியை சேர்ந்தவர் பப்பு(வயது50). இவரது மனைவி ராக்மா(40). பப்புவிற்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி மனைவி ராக்மாவிடம் பணம்கேட்டு துன்புறுத்தி வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் பப்பு வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்தார். அவரிடம் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கும்படி ராக்மா கூறினார். அப்போது அவர் தனக்கு மது குடிக்க பணம் வேண்டும் என்று கூறி ராக்மாவிடம் தகராறு செய்தார். ஆனால் ராக்மா தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்து விட்டார்.


No comments:

Post a Comment