Sunday, October 26, 2014

காந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டும் ஆர்.எஸ்.எஸ். வாரஇதழ் கட்டுரையால் சர்ச்சை

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ மலையாள வாரஇதழான ‘கேசரி’யில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி சர்ச்சைக்குரிய ஒரு கட்டுரை ஒன்று வெளியானது. கட்டுரையை பாராளுமன்றத் தேர்தலில் சாலக்குடி மக்களவைத் தொகுதியில் தோல்வியை தழுவிய பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் கோபால கிருஷ்ணன் அந்த கட்டுரையை எழுதியுள்ளார். கட்டுரையில், வரலாற்றை நியாயமான கண்ணோட்டத்துடன் பார்த்தால் மக்களுக்கு உண்மைகள் புரியும் என குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் கோபால் கிருஷ்ணன், இந்தியா - பாகிஸ்தான் பிரிவு, காந்தியின் படுகொலைக்கு ஜவகர்லால் நேருவின் சுய நலம்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment