Wednesday, October 1, 2014

ஹெரால்டு வழக்கு; சோனியா, ராகுல் காந்தி ஆஜர் ஆவதற்கான அவகாசம் நீடிப்பு

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தின் பல கோடி ரூபாய் சொத்துகளை யங் இந்தியா பத்திரிகைக்கு மாற்றி பின்னர் அதை அபகரித்துக் கொண்டதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்பட 6 பேர் மீது பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கின் தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகும்படி சோனியா, ராகுல்காந்தி, காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் ஓரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே ஆகியோர் ஆகஸ்டு 7ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி விசாரணை கோர்ட்டு ஜூன் 26-ம் தேதி உத்தரவிட்டது.


No comments:

Post a Comment