உத்தரபிரதேசத்தின் மதுவாதீயில் இருந்து லக்னோ செல்லும் கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 11 மணியளவில் கோரக்பூர் அருகே சென்று கொண்டிருந்தது. நந்தா நகர் கிராசிங் அருகே சென்ற போது ரெயிலை நிறுத்துவதற்கான சிக்னல் போடப்பட்டிருந்தது. இந்த சிக்னலையும் மீறி கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர், ரெயிலை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது லக்னோவில் இருந்து வந்து கொண்டிருந்த பராவ்னி எக்ஸ்பிரஸ் ரெயில், இணைப்பு தண்டவாளம் மூலம் அடுத்த தண்டவாளத்தில் திரும்பி கொண்டிருந்தது. ஆனால் கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரெயில் மிகவும் வேகமாக வந்ததால், அது பராவ்னி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
No comments:
Post a Comment