பாரதீய மகிளா வங்கி மூலம் இந்த நிதியாண்டில் ரூ.800 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து இருப்பதாக வங்கி தலைவர் உஷா அனந்தசுப்பிரமணியன் கூறினார். பெண்களுக்கு பிரத்யேக வங்கி சேவையை வழங்க நாட்டில் முதன் முறையாக கடந்த ஆண்டு நவம்பரில் பாரதீய மகிளா வங்கி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் 31–வது மகிளா வங்கி கிளை நேற்று தானேயில் திறக்கப்பட்டது. இந்த கிளையை பாரதீய மகிளா வங்கி தலைவர் உஷா அனந்தசுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment