அரியானா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. பின்னர் நடந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் மனோகர் லால் கட்டார், முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய அரசு பதவியேற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக பஞ்சகுலாவில் அமைந்துள்ள ஹூடா மைதானத்தில், பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. புதிய அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள், பா.ஜனதா ஆளும் மாநில முதல்–மந்திரிகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர். மேலும் பஞ்சாப் முதல்–மந்திரி பிரகாஷ் சிங் பாதல், அரியானாவில் முதல்–மந்திரி பதவியில் இருந்து விடைபெறும் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் விர் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
Read more at http://ift.tt/1oJmQMd
Read more at http://ift.tt/1oJmQMd
No comments:
Post a Comment