Sunday, October 26, 2014

இந்து பெண்ணை திருமணம் செய்த பார்சி மதத்தவருக்கு விவாகரத்து மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

பார்சி மதத்தை சேர்ந்த விராப் பெரோஷ், கடந்த 1999–ம் ஆண்டில் ஒரு இந்து பெண்ணை காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின் விராப் பெரோஷ் பார்சி மதத்தையும், அவரது மனைவி இந்து மதத்தையும் பின்பற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த 2001–ம் ஆண்டில் இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்தது. இதையடுத்து, அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, தனது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க கோரி விராப் பெரோஷ், மும்பை குடும்பநல கோர்ட்டில் கடந்த 2011–ல் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட்டு, அவர்களுக்கு விவாகரத்து வழங்க மறுப்பு தெரிவித்தது.

http://ift.tt/1tqazx7

No comments:

Post a Comment