மேற்கு வங்காளம் சட்டசபையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சக சிறப்பு செயலாளர் பிரகாஷ் மிஷ்ரா, "குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரியுடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அப்போது தீவிரவாதத்திற்கு எதிராக போராட, மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் முதல் மந்திரி உறுதி அளித்தார்,” என்றார். மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தோவால், மிஷ்ரா, என்.எஸ்.ஜி.(தேசிய பாதுகாப்பு படை) டி.ஜி, சவுதாரி மற்றும் இரண்டு மூத்த உளவுத் துறை அதிகாரிகள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை இன்று சந்தித்து பேசினார். மாவட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment