கடந்த 6 ஆண்டுகளில் சோதனையின்போது மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களில் 76 சதவீதம் பேர் மீண்டும் வேலையில் ஈடுபடுகின்றனர் என்று குழந்தைகள் உரிமைகளுக்காக போராடும் அரசு சாரா அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள சி.ஆர்.ஒய் மற்றும் ஆய்வு பங்குதாரரான சி.ஏ.ஆர்.ஈ. இணைந்து மேற்கொண்ட ஆய்வு முடிவு இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. 'குழந்தை தொழிலாளர் முறை குறித்த புதிய மேம்பட்ட பார்வை-மும்பையில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்ட சோதனைக்கு பின் நடந்தவை குறித்த வெளிப்பாடு' என்ற பெயரிலான ஆய்வு முடிவானது, 2008ம் ஆண்டில் நடந்த சோதனையில் மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது? மீட்புக்கு பின் மற்றும் மறுவாழ்வு மேம்பாட்டின்போது நடந்தவற்றை குறித்து வெளிப்படுத்துவதை நோக்காக கொண்டு உருவானது.
No comments:
Post a Comment