தீபாவளி நாளில் விதர்பா மண்டலத்தில் கடன் தொல்லையால் 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்து உள்ளது. மராட்டியத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி மக்கள் வாழும் பகுதி விதர்பா. சீரற்ற பருவநிலை மாற்றங்களால் விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தால் இங்கு தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தீபாவளி பண்டிகையை நாடே உற்சாகமாக கொண்டாடி வரும் வேளையில் விதர்பா பகுதியை சேர்ந்த 6 விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இது விதர்பா பகுதி மக்களுக்கு இருண்ட தீபாவளியாக அமைந்து விட்டது.
http://ift.tt/1tqazx4
http://ift.tt/1tqazx4
No comments:
Post a Comment