மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், பா.ஜனதா 122 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. இதனால் 63 இடங்களை பிடித்து 2–வது பெரிய கட்சியாக திகழும் பழைய நட்பு கட்சியான சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. ஆட்சியை பகிர்ந்து கொள்வது குறித்து இரு கட்சிகளும் திரைமறைவில் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் முடிந்து 11 நாட்கள் கடந்து விட்டதால், இனியும் தாமதிக்காமல் புதிய அரசை அமைப்பதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.
No comments:
Post a Comment