மராட்டிய அரசியல் வரலாற்றில் பா.ஜனதா அரசு முதல் தடவையாக அமைகிறது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். மேலும் பல மத்திய மந்திரிகள், பா.ஜனதா ஆளும் மாநில முதல்–மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். இதனால் வான்கடே மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் புதிய முதல்–மந்திரியை தேர்வு செய்ய பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்–மந்திரி தேர்வு செய்யப்படுகிறார். பா.ஜனதா மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்–மந்திரியாக தேர்வு ஆக அதிக வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment