Monday, October 27, 2014

வெளிநாட்டு வங்கி கணக்கு சட்டப்பூர்வமானது, விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது - பிரதீப் பர்மன்

டாபர் குரூப் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பிரதீப் பர்மன் வெளிநாட்டில் வசித்தபோது வங்கி கணக்கு தொடங்கப்பட்டது என்றும், இந்த வங்கி கணக்கை தொடங்க சட்டபூர்வமாக அனுமதி இருந்தது என்றும் தெரிவித்துக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "நாங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்றியுள்ளோம். வங்கி கணக்கு தொடர்பாக அனைத்து முழு தகவல்களையும் கொடுத்துள்ளோம். சட்டத்தின்படி வருவமானவரித் துறையிடம் தாக்கல் செய்துள்ளோம். தேவைப்படும் போது எல்லாம், சரியான வரியினை செலுத்தி வந்துள்ளோம்." என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment