"எந்தஒரு அரசியல் கட்சியுடனும் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி வைத்துக் கொள்ள் நாங்கள் விரும்பவில்லை. மாநிலத்தில் உள்ள 87 சட்டமன்றத் தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்த நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்." என்று ஜம்மு காஷ்மீர் மாநில பாரதீய ஜனதா பொறுப்பாளர் அவினேஷ் ராய் கண்ணா எம்.பி. தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததும், பாரதீய ஜனதா கட்சி அதன் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் நற்பெயர் கொண்டவர்களும், மக்களுக்கு யாரால் நற்பணியினை வழங்க முடியுமோ அவர்கள் வேட்பாளராக நியமிக்கப்படுவார்கள். வேட்பாளர்கள் பெயரினை தேர்வு செய்ய கட்சியின் தேர்தல் குழு இன்று சந்திக்கிறது. என்று அவினேஷ் ராய் கண்ணா தெரிவித்துள்ளார்.
Read more at http://ift.tt/1xvUowm
Read more at http://ift.tt/1xvUowm
No comments:
Post a Comment