Sunday, October 26, 2014

சோனியா, ராஜ்நாத் சிங், அத்வானி உள்பட 401 எம்.பி.க்கள் சொத்துக் கணக்கை தெரிவிக்கவில்லை

பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற ஒருவர், 90 நாட்களுக்குள் தனது சொத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று பாராளுமன்ற சொத்து விதிகள்-2004 கூறுகிறது. இந்நிலையில் நடப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விவரம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு பாராளுமன்ற செயலகம் பதில் அளித்திருக்கிறது. அதில் இடம் பெற்றிருக்கிற முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. சோனியா காந்தி, ராஜ்நாத் சிங், அத்வானி உள்பட 401 எம்.பி.க்கள் சொத்து கணக்கை தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment