நல்லாட்சி தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது பாராளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு சென்றார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த கல்வியாளரும் சுதந்திர போராட்ட தியாகியுமான மதன்மோகன் மாளவியா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மதன்மோகன் மாளவியாவுக்கு அவரது மறைவுக்கு பின்னர் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்து மகாசபையின் தலைவராக விளங்கிய மதன்மோகன் மாளவியாவுக்கு இன்று 153–வது பிறந்த நாள் ஆகும். இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர் ஆவார்.
No comments:
Post a Comment