சாரதா சிட்பண்டு மோசடி தொடர்பாக விசாரணை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ.யின் வளையத்திற்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் என ஒவ்வொருவராக சிக்கி வருகின்றனர். சமீபத்தில் மேற்குவங்காள போக்குவரத்து துறை அமைச்சர் மதன் மித்ராவை சி.பி.ஐ. கைது செய்தது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் மம்தா பானர்ஜி அரசு இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. இத்ரிஸ் அலி, 'மம்தாவை கைது செய்தால், பெங்கால் பற்றி எரியும்' என்று மிரட்டல் விடுத்துள்ளார். இவ்விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment