காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக காஷ்மீரின் கதுவா மற்றும் ஜம்மு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து கடந்த 18ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஜம்மு மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பல்லன்வாலா பகுதியில் நேற்று நடந்த தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் காயமடைந்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment