87 உறுப்பினர்களை கொண்ட காஷ்மீர் மாநிலத்துக்கு அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பா.ஜனதாவுக்கு 25 தொகுதிகளும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரசுக்கு 12 தொகுதிகளும் கிடைத்தன. சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றன. இதனால் மாநிலத்தில் ‘தொங்கு’ சட்டசபை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க வருமாறு மக்கள் ஜனநாயக கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் மாநில கவர்னர் என்.என். வோரா அழைப்பு விடுத்தார்.
No comments:
Post a Comment