Wednesday, December 31, 2014

பி.கே. திரைப்பட போஸ்டரில் மந்திரியின் படத்தை மார்பிங் செய்து பரப்பிய வாலிபர் கைது

வாட்ஸ் அப்பில் கர்நாடக மாநில சுகாதாரத் துறை மந்திரி காதீர் புகைப்படத்தை, பி.கே. திரைப்படத்தின் போஸ்டருடன் மார்பிங் செய்து, பாதகமான கருத்துக்களுடன் வாலிபர் நரேஷ் காத்தியால் பரப்ப செய்யப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் நாட்டின் கொடியும் அப்படத்தில் இடம்பெற்றிருந்தது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹாசன் என்பவரால் உல்லால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. நரேஷ் காத்தியின் போஸ்ட் குறிப்பிட்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளது என்று அவர்களால் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, தகவல் தொடர்பு சட்டம் பிரிவு 66 (எ) மற்றும் 67 கீழ் வழக்கு பதிவு செய்து, நரேஷ் காத்தியை போலீசார் கைது செய்தனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment