Monday, December 1, 2014

இந்தி நடிகையின் கன்னத்தில் அறைந்த வாலிபர் கைது, பரபரப்பு வாக்குமூலம்

இந்தி சினிமா நடிகை காவ்கர் கான். மாடலிங் அழகியாக இருந்து 'ராக்கெட் சிங்' திரைப்படம் மூலம் இந்தி சினிமா உலகில் அறிமுகம் ஆனவர். டி.வி. நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். இவர் நேற்று மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட டி.வி. நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டு இருந்தார். இதில் ஏராளமான பார்வையாளர்களும் திரண்டு ரசித்துக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் பார்வையாளராக வந்த வாலிபர் ஒருவர் நிகழ்ச்சி படப்பிடிப்பின் இடைவேளையில் திடீரென மேடைக்கு ஏறி சென்றார். அவர் நடிகை காவ்கர் கானை 'பளார்' என கன்னத்தில் அறைந்தார். மேலும் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது.


No comments:

Post a Comment