சினிமா தியேட்டரில் மாலைக்காட்சி ஓடி கொண்டு இருந்தது. தியேட்டருக்குள் ஏராளமான ரசிகர்கள் சினிமா பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது தியேட்டரின் பின்புறத்தில் இருந்து புகை கிளம்பியது. திடீரென தீ பற்றி எரிந்தது. தியேட்டரின் மேற்கூரை, திரை, நாற்காலிகள் மற்றும் இதர மர பொருட்களுக்கு தீ பரவியது. இதனால் தியேட்டருக்குள் படம் பார்த்து கொண்டு இருந்த ரசிகர்கள் உயிர் பிழைக்க அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
No comments:
Post a Comment