இந்தியாவில் ஒரு பிரச்சனை என்னவென்றால், சட்டங்கள் அனைத்தும் இருக்கும். ஆனால், அதை செயல்படுத்த முடியாது. 40 மைக்ரான் அளவுகளுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், குப்பையை அள்ளுபவர்கள் இதை ரீசைக்கிள் செய்ய முடியாது என்பதால் எடுத்துச் செல்வதில்லை. கடைசியில், அவை தெருக்களில் சிதறிக்கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் டன்கள் பிளாஸ்டிக் குப்பைகள் உற்பத்தியாகின்றன. அதில், 9 ஆயிரம் டன்கள் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. மீதமுள்ள குப்பைகள் கிராமங்களில் குவியல் குவியலாக ஆங்காங்கே மலை போல் இருப்பதை நாம் காணலாம். கார்பன்-டை-ஆக்ஸைடு போல் அவை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அங்கேயே இருக்கும். இது ஒரு பெரிய பிரச்சனை. சாதாரணமான விஷயமல்ல. இன்று நம் நாட்டில் பலியாகும் ஒவ்வொரு பசுமாடு மற்றும் எருமை மாடுகளின் வயிற்றில் குறைந்தது 30 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளாவது இருக்கும். இந்த அவல நிலையை மாற்ற விரைவில் அதிரடி பிரச்சாரம் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள நகர்புறங்களில் கார்பனை குறைக்கவும், பசுமையை அதிகரிக்கவும் டவுண் பிளேனர்கள் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தீ
Read more at http://ift.tt/1BDBxkk
Read more at http://ift.tt/1BDBxkk
No comments:
Post a Comment