Saturday, February 21, 2015

சர்ச்சைக்குரிய சூட் உள்ளிட்ட மோடியின் பரிசுபொருட்கள் ரூ.8.33 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

நரேந்திரமோடி கடந்த மே மாதம் 26–ந் தேதி பிரதமர் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இதுவரை தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களையும், கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வந்தபோது தான் அணிந்து இருந்த ‘பந்த்கலா’ எனும் உயர் ரகத்தை சேர்ந்த ‘சூட்’டையும் ஏலம் விட முடிவு செய்தார். இந்த ஏலம் மூலம் கிடைக்கின்ற நிதியை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்த நரேந்திரமோடி முடிவு செய்தார். இதனையடுத்து பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள அறிவியல் கூட்ட அரங்கில் கடந்த 18–ந்தேதி தொடங்கி 3 நாட்களாக ஏலம் நடந்து வந்தது.


No comments:

Post a Comment