மாதத்திற்கு 5 முறைகளுக்கு மேல் ஏ.டி.எம். பயன்படுத்தினால் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது. ரிசர்வ் வங்கி விதிமுறையின்படி டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 6 மெட்ரோ நகரங்களுக்கு இந்த விதி பொருந்தும். ஏ.டி.எம்-மை பயன்படுத்தி பணம் எடுப்பது மட்டுமல்லாமல், மினி ஸ்டேட்மென்ட் உள்ளிட்ட எந்த நோக்கத்துக்கும் 5 முறைக்கு மேல் பயன்படுத்தும்போது கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் மற்ற வங்கியின் ஏ.டி.எம்.களை மாதத்துக்கு ஐந்து முறை பயன்படுத்தலாம் என்ற நிலை மூன்றாக குறைக்கப்பட்டது.
Read more at http://ift.tt/1wmDiOZ
Read more at http://ift.tt/1wmDiOZ
No comments:
Post a Comment