Thursday, November 27, 2014

கூட்டணி தொடர்பாக நாளை சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 121 எம்.எல்.ஏ.க்களை கைவசம் வைத்து உள்ள பா.ஜனதா தனித்து சிறுபான்மை அரசை அமைத்தது. இதைத் தொடர்ந்து கவர்னரின் உத்தரவின் பேரில், பா.ஜனதா அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி குரல் ஓட்டு மூலம் வெற்றி பெற்றது. சட்டசபையில் தற்காலிக வெற்றி கண்டுள்ள பா.ஜனதா அரசுக்கு எந்த நேரத்திலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பழைய நட்பு கட்சியான சிவசேனாவை ஆட்சியில் பங்கேற்க செய்யும் முயற்சியை பா.ஜனதா இன்னமும் கைவிடவில்லை.


No comments:

Post a Comment