டெல்லி - மீரட் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ராம் ரத்தான் நேகி என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று ஓட்டலுக்கு கும்பல் ஒன்று சாப்பிடவந்தது. கும்பல் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு கூடுதலாக, இரண்டு சப்பாத்தியை வாங்கி சாப்பிட்டுள்ளது. இதனையடுத்து சாப்பாட்டுக்கு மட்டும் பணம் கொடுத்துள்ளது. சப்பாத்திக்கு பணம் கொடுப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது நேகி கும்பலை சேர்ந்த வாலிபர் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இது தொடர்பாக தலைமறைவாக உள்ள கும்பலுக்கு எதிராக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment