"நாம் பெரிய வழியில் நாட்டின் சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் சுற்றுலா துறையின் பங்களிப்பு ஏறத்தாழ 7 சதவீதமாக உள்ளது. அது இரட்டிப்பாக்க வேண்டும்," என்று இ-விசா வசதியை தொடங்கி வைத்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இ-விசா திட்டத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் பணம் செலுத்தி 72 மணி நேரத்திற்குள் மின்னணு பயண அங்கீகாரத்தினை (ETA) பெற முடியும்.
No comments:
Post a Comment