இந்தியாவின் நிதி தலைநகரான மும்பை மாநகரில் கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளினர். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 166 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 308 பேர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதலின் 6–வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதற்கிடையே குண்டு வெடிப்பு தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெறும் விசாரணை மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment